இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கும்பொழுது உண்மையில் பிரஞ்சு இலக்கியத்தின் மீது ஒரு பெருங்காதல் தோன்றுகிறது. புதிர்களும் அர்த்தங்களும் மாறி மாறித் தோன்றும் ஒரு கனவின் கிளர்ச்சித் தன்மையைத் தந்துவிடுகிறது இதன் ஒவ்வொரு கதையும். தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் படைப்பாளர்களின் படைப்புத்திறனும் மொழிபெயர்ப்பாளரின் மொழிபெயர்ப்பு நேர்த்தியும் இணைந்தே செல்லும் தண்டவாளம்போல நம்மைப் புதிய புதிய தூரங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. ‘கடவுள் கற்ற பாடம்’ கடவுளுக்கான பாடமேதான்,
Be the first to rate this book.