லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான சுத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம்பார்த்துவிடும்.செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம.வள்ளியப்பனின் இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன்.
கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள்குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ‘அள்ள அள்ளப்பணம்’ வரிசையில் முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் மிகுந்த கவனம் பெறும் என்பது உறுதி.
Be the first to rate this book.