வெகுகாலமாக அனைவராலும் மிகவும் ரசிக்கத்தக்கதாகவும் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகையிலாகவும் அமைந்த பஞ்சதந்திரக் கதைகளை அறிந்திராதவர்கள் குறைவு. விலங்குகள் மூலமாக நீதியை போதிக்கும் பஞ்சதந்திரக் கதைகள் படிக்கப் படிக்க ஆர்வமூட்டுபவை. இன்றைய தலைமுறைச் சிறார்கள் படித்து மகிழ்வதற்காக பஞ்சதந்திரக் கதைகளில் 23ஐத் தேர்ந்தெடுத்து அவற்றை நாடக வடிவில் இந்நூலாசிரியர் வடிவமைத்துள்ளார். பள்ளி விழாக்களில் மற்றும் ஊர் விழாக்களில் சிறார்கள் நாடகமாக அரங்கேற்றி மகிழ்வதோடு பார்வையாளர்களையும் இன்புறச் செய்யலாம்.
Be the first to rate this book.