கடல்சார் வளங்கள் பற்றிய எல்லா வரலாற்று நிகழ்வுகளிலும் ஒரு குறிப்பிட்ட சங்கிலித் தொடரைத் தவறாது பார்க்க முடிந்தது. ஒரு வளம் கண்டுபிடிக்கப்பட்டு சிறிது காலத்துக்குள்ளாகவே அதை எப்படியோ அறிந்துகொண்டு அதை வணிகமாக்கும் அமைப்புகள் அங்கு வந்து சேர்ந்துவிடுகின்றன. அரசு அதிகாரங்கள் அந்த வளம் பற்றிய தெளிவான ஒரு சட்டத்தையோ விதிமுறையையோ வரையறுப்பதற்கு முன்பாகப் பெரும்பாலான வளம் சுரண்டப்பட்டுவிடுகிறது. வணிகம் உச்சத்தில் இருக்கும்போது அமலுக்கு வரும் சட்டங்கள் நடைமுறையை மாற்றுவதற்குத் திண்டாடுகின்றன. இயற்கை மெல்ல அழிகிறது.
Be the first to rate this book.