ஒரு அறிவார்ந்த, ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாக எதை கருதலாம்?
அங்கே ஒரு அச்சமின்மை நிலவ வேண்டும். யாரும் யாரைப் பார்த்தும் அஞ்சாத ஒரு நிலை இருந்தால் அங்கே சம்த்துவம் நிலவுகிறது என்று பொருள். யாராவது, யாருக்காவது எதன் பொருட்டோ பயந்து கொண்டிருந்தால் அந்த சமூகத்தை நோய் பீடித்திருக்கின்றது என்று அர்த்தம். நம் பெண்கள் அஞ்சி அஞ்சித்தான் வேலைக்குச் செல்கிறார்கள், படிக்கச் செல்கிறார்கள், பிரயாணம் செய்கிறார்கள், வீட்டை விட்டு வெளியேறியவள் வீட்டுக்குத் திரும்பும்வரை அவளை நம் சமூகம் ஒரு பதட்டத்துடனேதான் வைத்திருக்கிறது. இந்த அச்சத்தையும், பதட்டத்தையும் தமது கல்வியாலும், துணிச்சலாலும், தைரியத்தாலும் வெற்றிக்கொண்ட பெண்களையும் நானறிவேன். ஆனால் அவர்கள் ஒப்பீட்டளவில் வெகு குறைவானவர்களே.
- பாஸ்கர் சக்தி
Be the first to rate this book.