கம்போடியா எங்குள்ளது என்று கூட நான் அறிந்திராத நிலையில் என்னை ஒரு ஆலோசகராகத் தேர்ந்தெடுத்து, டோன்லே சாப் நதியின் ஆழத்தை அதிகரிக்கவும், அதன் போக்கை சரி செய்யும் என்னை அனுப்பிவைத்த உலக வங்கிக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். அந்த அழைப்பு வந்துவுடன் முதன்முதலாக நான் கலந்தாலோசித்தது திரு. சிட்டியைத்தான்! ஏனெனில் அவர் கம்போடிய மன்னர் சென்னை வந்திருக்கையில் அவரை கம்போடிய மன்னர் சென்னை வந்திருக்கையில் அவரை அழைத்துக்கொண்டு மாமல்லபுரம் சென்று வந்ததும் அந்நிகழ்வை என்னுடன் பங்கிட்டுக் கொண்டதும் நினைவில் இருந்து அகலாதவை. ஆகையால் சிட்டியிடம் கூறியபோது, அவர் எனக்குச் சில விவரங்களைக் கூறினார். அது மட்டுமன்றி, கம்போடியா பற்றிய சில நூல்களையும் பற்றிக் கூறினார். அவரது ஊக்கம் தான் பின்னர் என்னை ''புதுகைத் தென்றலில்'' எழுதவும் உதவியது. ஆகையால் அவர் நினைவில் நிற்கிறார்.
Be the first to rate this book.