காட்டில் வாழும் சிங்க, காண்டாமிருகம், குரங்கு, அணில் மற்றும் கழுகு எல்லாம் நண்பர்கள். தினமும் சந்தித்து தங்களுக்குள் பரஸ்பரம் பேசிக்கொள்வார்கள். ஒருநாள் கழுகு, ஏரியொன்றில் வேறொரு கண்டத்தில் இருந்து வலசை வந்த பறவை ஒன்றை சந்திக்கிறது. அதனிடம் பேசும்போது கடல் பற்றி சொல்லியிருக்கிறது. உடனே கடலைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை கழுகிற்கு வருகிறது. இதனை தனது நண்பர்களிடம் சொல்ல அவர்களுக்கு கடலைப் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் வருகிறது.
ஒரு காலைப் பொழுதில் எல்லோரும் கடலைப் பார்க்க கிளம்புகிறார்கள். காடு, மலை, புல்வெளிகள், ஆறு என எல்லாவற்றையும் கடக்க முயற்சிக்கும்போது பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கின்றன. நடுநடுவே சில நண்பர்களும் கிடைக்கிறார்கள். அவர்களின் உதவியுடன் இந்த நண்பர்கள் குழு கடலைச் சென்று அடைகின்றனவா? வழியில் சந்திக்கும் மிக பயங்கர பிரச்னைகள் என்று கதை விறுவிறுப்புடன் போகிறது. சிறுவர்கள் காட்டுயிரிகள் குறித்த அறிவையும், கதைக் கற்பனைகளையும் வளர்த்துக்கொள்ள இந்நூல் சிறந்தது.
Be the first to rate this book.