ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக உயிரோசை இணைய வார இதழில் அவர் எழுதிய இந்தப் பத்தி, சங்க இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ் வாழ்வின் சாரம், இந்திய இலக்கியத்தின் போக்குகள், உலக இலக்கிய தரிசனங்கள், சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்த அங்கதமும் கூர்மையான அவதானமும்கொண்ட விமர்சனங்கள், நாடகம் குறித்த பார்வைகள் எனப் பல்வேறு தளங்களில் விரிந்து செல்கிறது. நமது காலகட்டத்தின் மாபெரும் படைப்பாளிகளில் ஒருவரான இ.பாவின் ஆளுமை என்ற கடலின் இன்னொரு துளி இந்த நூல்.
Be the first to rate this book.