மனசுக்குள் உந்துதலோ, உற்சாகமோ, வருத்தமோ, சோகமோ, அழுகையோ, காதலோ, கோபமோ, எதிர்பார்ப்போ.. எதுவென்றாலும் கவிதையின்வழி இறக்கி வைக்கையில் மனசு இலேசாகி விடுகிறது. கவிதை என்பதை மனதின் ஆசுவாசமாகவே உணர்கிறேன். கவிதை என்பது ஓர் அற்புத உணர்வு. அதைக் கவிதை மட்டுமே தரமுடியும் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். கவிதை என்பது ஒற்றை வாசிப்பில் ஓர் உணர்வை மனசுக்குள் நிரப்ப வேண்டும். அது குயிலின் ஓசையாக இருக்கலாம் அல்லது ரயிலின் கூவலாக இருக்கலாம் அல்லது பட்டாம்பூச்சியின் சிறகசைப்பாக இருக்கலாம் அல்லது அழுகையாக இருக்கலாம் அல்லது காதலாக இருக்கலாம்.
Be the first to rate this book.