புரூனோ ஸல்ஸ்
போலந்தின் காஃப்கா என அழைக்கப்படும் புரூனோ ஸல்ஸின் சானடோரியம், ஒரு சர்ரியல் குறுநாவல். மரணமடைந்த அப்பாவைப் பார்க்க வரும் மகன், ஒரு கனவே போல் பிறழ்வுற்ற
நிலவெளியில் மிதக்கும் சானடோரியத்தில் அலைகிறார். மரணத்திற்குப் பிறகு, “உறக்கமே போல் சாக்காடு” என்பதை மகன் பாத்திரம் சானடோரியத்தில் புரிந்து கொள்கிறது.
..
நிகோலாய் கோகோல்:
அரசியல் பகடிப் புனைவுகளின் தொடக்கமாக அமைந்த நிகோலோய் கோகலின் ‘மூக்கு’ இன்றும் புத்தம் புதியதாக இருக்கிறது. உலகெங்கும் மிகப் பெரிய அளவில் பரவியிருக்கும் அதிகாரப் படிநிலைகள், திடீரென மூக்கு காணாமலாகும் ஒரு மிகை யதார்த்தச் சிக்கலின் முன் சரிந்து வீழ்கின்றன. சிரிக்கச் சிரிக்க வாசிக்கக் கூடிய செவ்வியல் படைப்பு.
..
மியா கூட்டோ:
மொசாம்பிக்கின் நிகரற்ற படைப்பாளி மியா கூட்டோவின் குறுநாவல் “கடல் என்னை நேசிக்கிறது” கடல்சார் கட்டுக்கதைகளால் ஆகிய நவீனப் புனைவு. சாகஸமும் காதலும் மரணமும் இணையும் விநோதப் புள்ளிகளில் நகரும் இக் குறுநாவல் மிக வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
Be the first to rate this book.