ஆர்க்டிக், பசிபிக் என்று பல பெயர்களில் கடல்களைப் பிரித்தாலும் உலகில் இருப்பது ஒர ஒரு கடல்தான்.
நம்ம முடிகிறதா? உலகின் மிக ஆழமான பகுதியும் உயர்ந்த எரிமலைகளும் கடலுக்குள்ளேதான் இருக்கின்றன. கடல் நீரில் இருந்து தங்கம் எடுக்க முடியும். கடலின் ஆழ்பகுதியில் வசிக்கும் உயிரினங்களால் கடலின் மேல் பகுதிக்கு வர முடியாது. மேல் பகுதியில் வசிக்கும் உயிரினங்கள், ஆழத்துக் செல்ல முடியாது.
ஆயிரம் ஆயிரம் அதிசயங்களின் பொட்டலம் கடல். விதவிதமான உயிரினங்களையும் தாவரங்களையும் உலோகங்களையும் கொண்ட அதிசய உலகம் அது. முதன் முதலாக்க் கடலைக் கண்டபோது, மனிதன் அடைந்த ஆச்சரியம் இன்று வரை நீடிக்கிறது.
கல்லாத்து கடல் அளவு என்பார்கள். கடல் பற்றியும் நமக்குத் தெரிந்தது கையளவுதான். இந்தப் புத்தகம் ஒரு கையளவு கடல்.
Be the first to rate this book.