திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி ஆலயத்தின் முகப்பு வாயிலில் நின்று பார்த்தால் நூல்பிடித்தாற்போலத் தோற்றமளிக்கும் Ôசாலைக் கம்போளம்Õ ஒரு மினி திருவனந்தபுரம் மாதிரி. இங்கே பரபரப்பான வியாபார சந்தடிகளின் பின்னே உயிர்ததும்பும் வாழ்க்கை இருக்கிறது. இந்த வாழ்க்கையைக் கண்டு, கேட்டு, உணர்ந்து பழக்கப்பட்டவர் கதாசிரியர். அதனால்தான் சாலைக் -கடையை நிலைக்களனாக வைத்து அற்புதமான குணச்சித் திரங்-களை, உயிரோட்டமுள்ள சம்பவங்களை ஒன்றுபோல மற்றொன்று இல்லாமல் சித்தரிக்க அவரால் முடிகிறது.
நுணுக்கமான வர்ணனைகள், ஆழ்ந்த நோக்கு, தட்டுத் தடங்கலில்லாத நடை, எல்லாமாகச் சேர்ந்து வண்ணப் பட்டுக் குஞ்சங்-கள் போல இதமான, கணிசமான கதைகளாக இங்கே உருப்பெற்றி-ருக்கின்றன. சாலைக்கடை வீதியின் பேராசை, கோபதாபங்கள், கனவுகள், ஆதங்கங்கள், வீம்பு, வைராக்கியம், சபலம் அனைத்தும் இந்தக் கதைகளில் விம்மிப் புடைத்து நிற்கின்றன. உயிர்மூச்சு விட்டுத் துடிக்கின்றன.
- இரா. இளஞ்சேரன்
Be the first to rate this book.