1947ஆம் வருடத்திய வசந்த காலம்.
மௌண்ட் பேட்டன் பிரபுவும் அவரது மனைவி எட்வினாவும் புதுதில்லியில் வந்திறங்கினர். இந்தியாவில் உள்நாட்டுக் கலகம் வெடித்த காலம். எட்வினா தயக்கம் நிறைந்தவர். ஆனால் விதிகளை உடைக்கத் தயங்காதவர். அவருடையது அலைக்கழிப்புக்கு உள்ளான ஆன்மா. பேரழகி, பட்டாசு போன்றவர். வெளியில் தெரிந்தவை மட்டுமல்ல அவர். அவருடைய கவர்ச்சி ஒரு முகப்பு மட்டுமே. அதற்குப் பின்னால் இருந்தது செல்வாக்கும் அதிகாரமும் நிரம்பிய அதிபுத்திசாலியான பெண்மணி.
அவருடைய உண்மையான இயல்பைப் புரிந்து கொண்டவர் அவருடைய நண்பர் ஜவஹர். அவர்கள் இருவர் வாழ்வை மட்டுமல்ல, பல கோடி இந்தியர்களின் வாழ்வையும் புரட்டிப் போட்ட நிகழ்வுகளும் உறவுகளும் யாரும் ஊகித்திருக்க முடியாதவை.
பிரிவினை காலத்தில் நிகழும், 'கடைசி வைஸ்ராயின் மனைவி’ என்னும் இந்நாவல் இரு நாடுகளின் பிறப்பை, காதலை, துயரத்தை, சோகத்தை, இரக்கமின்மையை, நம்பிக்கையின் வெற்றியைப் பேசும் இதயத்தை உருக்கும் கதை.
Be the first to rate this book.