சங்க இலக்கியத்துள் எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் கபிலர் பாடியனவாகவுள்ள பாடல்களை திறனாய்வாக அறிமுகம் செய்து விளக்க முனைகிறது இந்நூல். தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் என்பது போல கபிலர் இயற்றிய பாடல்களைக் கொண்ட இந்நூல் கபிலம் எனப் பெயர் பெற்றது.
இயற்கைக் காட்சிகளிலே கபிலர்கொண்ட திளைப்பில் விளைந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டால் உலக இலக்கிய அரங்கிலே ஒளிப்புகழ் பரப்பும் என்பதில் ஐயமில்லை. மலையும் மலை சார்ந்த இடமும் ஆகிய குறிஞ்சிக்காட்சிகளை ஆழ்ந்தகழ்ந்து லயித்துப் பாடும் இப்பாடல்கள் அற்புதமும் அதிசயமுமான இயற்கை விருந்து என்பதனை ஒவ்வொருவரும் வாசித்துணரலாம்.
Be the first to rate this book.