கபாலியை ஒரு சாக்காக வைத்து கனமான ஒரு நீண்ட உரையாடலை டி.தருமராஜ் நிழத்தியிருக்கிறார். திரைப்படத்தின் கதை, திரைப்படத்துக்கு வெளியில் பின்னப்படும் கதை என்று இரண்டாகப் பிரித்து அவர் கபாலியை ஆராய்வதைப் போல் கபாலி பற்றிய தருமராஜின் பார்வை, கபாலிக்கு வெளியில் நீளும் அவருடைய பார்வை என்று இரண்டாக இந்த நூலைப் பிரித்து ஆராய்ந்து, ரசிக்கலாம்.
விவாதத்தின் மூலம், ஒரு திரைப்படத்தை இந்த உயரத்துக்கு கொண்டு செல்ல முடியுமா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அவருடைய விமர்சனம் பலவித ஜன்னல்களையும் கதவுகளையும் படபடவென்று திறந்து காட்டுவதால் வியப்பும் ஏற்படுகிறது.
மானுடவியல், நாட்டுப்புறவியல் என்றில்லை, சினிமா தவிர்த்த ஏதேனும் ஒரு துறை சார்ந்த நுட்பமான அறிவும் புரிதலும் இருந்தால்தான் ஒரு நல்ல சினிமா விமர்சனம் எழுதமுடியும் போல.
- மருதன்
Be the first to rate this book.