சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்தைப் போன்றதும் -அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரமான கபாடபுரத்தைப் பற்றி இன்று நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழரசர்கள் மூவருமே கடல் வாணிகம்,திரைகடலோடிப் பயணம் செய்து வளம் சேர்த்தல், ஆகிய குறிக்கோள்களுடையவர்களாயிருந்ததனால் கடலருகில் அமையுமாறே தங்கள் கோநகரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள்.இந்த வகையில் பாண்டியர்கள் ஆண்டு அமைத்து வளர்ந்து வாழ்ந்த கடைசிக் கடற்கரைக் கோநகரமான கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டு அழிந்துவிட்டது.
Be the first to rate this book.