பின்நவீன வாழ்வின் மீதான மனநிலையை இக்கவிதைகள் பேசுகின்றன. அதிகாரம் வெளிக்காட்ட விரும்பாத அதன்
கோமாளிமுகத்தின்முன் இவை தீக்குச்சியைக் கொளுத்துகின்றன.
மிக நவீனமாகவும் அதேநேரம் ஆதித் தமிழ்க்கவிதை மரபின்நாடகவடிவோடும் இயங்கும் தொகுப்பு இது. கலைஞனாக, சுய சிந்தனை கொண்டவனாக இருப்பதன் தைரியமும் அதிகாரத்திற்கு நேரெதிர்த் திசையில் நிற்கவேண்டியிருப்பதன் பாதுகாப்பின்மையும் இக்கவிதைகளின் தொனியாக இருக்கின்றன. நவீன தனிமனித வாழ்வின் அகநெருக்கடிகளையும் சமூக மனித வாழ்வின்அபத்தங்களையும் மென் பகடியோடும் சுயகழிவிரக்கத்தோடும்
பேசும் கவிதைகளாகவும் இருக்கின்றன.
தமிழில் ஊடுபிரதித் தன்மை கொண்ட கவிதைகள் எழுதும் வெகுசொற்பமான கவிகளில் ஒருவர் இளங்கோ கிருஷ்ணன். இந்தத் தொகுப்பில் மிகையறிவிற்கும் பித்துநிலைக்கும் இடையிலொரு கால்பந்து விளையாட்டைக் காண்பீர்கள். போகிறபோக்கில் அந்தவிளையாட்டு மைதானத்திற்குள் பந்தை உதைத்துக் கொண்டு ஓடுகிறவர்களாக நீங்களே மாறிப்போவீர்கள்.
- மனோ மோகன்
Be the first to rate this book.