இளங்கோ கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது.
பொதுவாக இவரது கவிதைகளின் மையச் சரடு, ஆட்டத்தின் விதிகளை அறியாத ‘சூதாட்டத்தின் காய்க’ளைப் போல நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சாமானிய மனிதனின் இயலாமை நிறைந்த பதற்றக் குரல். எனினும், தப்பித்தலறியாத இயலாமையின் தருணங்களிலும் துக்கத்தை உதற முனையும் மென்மையான கிண்டல் கலந்த குரல். காலம், சூழல் சார்ந்த குறுகிய எல்லைகளை உடைத்துக்கொண்டு திமிறியெழும் நவீன மனிதனின் சுதந்திரக் குரல்.
உரைநடையில் கவிதையை எழுப்பமுனையும் இன்றைய இளம் கவிஞர்களிடையே தனித்து ஒலிக்கிறது இளங்கோ கிருஷ்ணனின் கவிதைக் குரல்.
Be the first to rate this book.