காவு தொகுப்பில் உள்ள கதைகள் சமீப ஆண்டுகளில் சிறுபத்திரிகைகளில் வெளியானவை. நல்ல கதைகள் எழுத விரும்பி ஆர்வ வேகத்தில் மோசமான கதைகளாக மாறிவிடுவதற்கான சந்தர்ப்பங்களை அனிச்சையாகத் தவிர்த்துவிட்ட கதைகளும்கூட. பால்நிலவன் கதைகள் பெரும்பாலும் வடதமிழகத்தைப் பிரதிபலிக்கிறது. மாறும் காட்சிகளுக்கான திரைச்சீலையாகவே இவரது கதைகளில் வடதமிழகம் அதன் வாழ்வியலை மையப்படுத்துகிறது. தனக்கென்று அடையாளம் தேடும் இளமையின் தேடல்கள் வீறுகொண்டெழுந்து ததும்பியும் குழம்பியும் நிற்பதுதான் பல கதைகளில் விரவிக் கிடக்கின்றன. அதற்கு ஏது வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு.
Be the first to rate this book.