இந்நூலில் 2005, 2008, 2010 & 2013 -ம் ஆண்டுகளின் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் உள்ளடக்கியது. 14/11/2012 அன்று அமலுக்கு வந்த "பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 பற்றிய முக்கிய குறிப்புகளைக் கொண்டது. 2012-ஆம் ஆண்டு வரையிலான இந்திய உயர்நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் முக்கிய தீர்ப்புகளையும் உள்ளடக்கியது. முற்றிலும் இன்றைய நிலைக்கேற்ப மேம்படுத்தப்பட்ட, காவல் புலன் விசாரணையைப் பற்றி, இன்றுவரை தமிழிழ் வெளிவராத அனைத்துத் தரப்பினருக்கும் அத்தியாவசியமான புதிய படைப்பு இது.
காவல் அலுவலர்கள், வழக்குரைஞர்கள், சட்ட அலுவலர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள், தினந்தோறும் புரட்டிப் பார்த்து, மேம்படுத்திக்கொள்வதை உறுதி செய்யும் உபயோகமான படைப்பு. காவல் அலுவலர்கள், மாநில மற்றும் அகில இந்திய "காவல் பணித்திறன் போட்டிகளில்" கலந்துகொள்ள, பதவி உயர்வுக்கான முந்தைய பயிற்சி தேர்வுகளில் வெற்றிபெற உதவும் ஒரு உன்னத படைப்பு.
மேலும் நூலில் கடந்த 47 ஆண்டுகளாக நீதிமன்றங்கள் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும். அதேபோல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவிசாரணையில் எவ்வாறு செயல்படுவது, புகார் தர வருபவர்களை மரியாதையுடனும், அக்கறையுடனும் நடத்த வேண்டும், மாறாக அலைக்கழிக்கக் கூடாது என்பதையும் தெளிவுப்படுத்தி உள்ளார். காவல் துறையில் பணிக்கு சேர்பவர்களும், பணியில் இருப்பவர்கள் மட்டுமல்லாது நீதித்துறை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டு நூலாக அமையும்.
Be the first to rate this book.