இந்தியக் காடுகளுக்குள் ஒரு சுற்றுலா அழைத்துச்சென்று, அங்கிருக்கும் அரிய காட்டுயிர்கள், தாவரங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது, இந்த வண்ணப் புத்தகம். அவற்றின் தனித்தன்மைகளையும் சுவாரசியங்களையும் எளிதாக வாசித்து அறிந்துகொள்ளலாம்.
மோப்பம் பிடிக்கும் யானைகள், கொத்தாத பாம்பு, கிளையுள்ள பனைமரம், ஆண் பப்பாளி மரம்-பெண் பப்பாளி மரம், தேளைப் போல் கொட்டும் புல், மனிதர்களைக் கண்டு அஞ்சாத பறவைகள் என இயற்கை உலகம் பற்றி நாம் கேள்விப்பட்டிராத பல அம்சங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக விளக்கப்பட்டுள்ளது.
இமையில்லாமல் மீன்கள் எப்படித் தூங்குகின்றன?, சிறுத்தைகள் ஏன் அடிக்கடி காட்டுக்கு வெளியே வருகின்றன?, இயற்கை நாட்காட்டிகளைப் போல் தாவரங்கள் எப்படிக் காலத்தைச் சொல்கின்றன?, காட்டுயிர்களை ஏன்-எதற்காகப் பாதுகாக்க வேண்டும்? - என்பது போன்று நமக்கு அடிக்கடி எழும் பல கேள்விகளுக்கு தெளிவான பதிலை இந்த நூல் தருகிறது.
இந்தியக் காடுகள், காட்டுயிர்கள் குறித்த மேம்பட்ட புரிதலை இந்த புத்தகம் கொடுக்கும்.
Be the first to rate this book.