முன்பு நூறு உலக இலக்கிய நாவல்களைப் பற்றிய நீண்ட கட்டுரைகளை எழுதினேன். அவற்றில் சிலவற்றை மட்டும் என் வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டேன். பலவற்றை என்னுடைய வகுப்பறைகளில் பயன்படுத்தினேன். என்னுடைய வாசிப்பின் வழி அந்த நூறு நாவல்களின் வழி நான் தேடிக்கண்டடைந்தவற்றை ஓர் இலக்கிய விமர்சன நூலாக எழுதவேண்டும் என்பது எனது திட்டமாக இருந்தது.என்னுடைய அந்த நாவல்கள் தேர்வு அவற்றின் புதுமையான வடிவம், வரலாற்று முக்கியத்துவம், மீபுனைவுத்தன்மை (metafiction), அழகியல் நுட்பம், அவை கையாளும் இருத்தலியல் பிரச்சனைகள் ஆகியவை சார்ந்ததாக இருக்கிறது. அவற்றினூடே கண்ணுக்குத் தெரியாத சரடொன்று ஓடிக் கொண்டிருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். இந்த நாவல்களைப் பற்றி வாசிப்பது, அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கத் தூண்டக்கூடும். அவை தமிழுக்கு வளம் சேர்க்கும் தமிழ் இலக்கியத்தின் செல்திசையை மாற்றும் என நம்புகிறேன்.
Be the first to rate this book.