தமிழ் நவீனப் புனைவில், வாழ்வின் ஆதாரங்களை இழந்துவிடாமல், பண்பாட்டு இழை முறிந்துவிடாமல் மக்கள் மொழியிலே ஈரவாடையுடன் உயிர் பெறுகிறது பாரதிபாலன் கதை உலகம்! ஒரு ஊரின் ஒரு பாதியும் மறுபாதியும்தான் இந்தப்புனைவு என்றாலும் வெளிகளைக் கடந்து நிற்கிறது! சிற்றெறும்பாய் நகரும் அன்பும் வன்மமும், இரவுகள் எழுப்பும் நடுங்கும் குரலும் அப்பட்டமான பகல் பொழுதுகளும்... மாறுபட்ட இருவேறு மனித இயல்புகளையும் இயக்கங்களையும்... அதனதன் இயல்பில் ஒரு கிராமத்தின் ஆன்மாவைத் தரிசிக்கமுடிகிறது!
Be the first to rate this book.