நவீன இலக்கிய உலகில் குன்றாத ஆர்வத்துடனும் குறையாத வேகத்துடனும் செயலாற்றிய இலக்கியத் தீவிரவாதிகளில் ஜி. நஞ்சுண்டனும் ஒருவர். அவரது அக்கறைகள் பரந்தவை. அதற்கேற்ப அவரது செயல்பாடுகளும் பன்முகம் கொண்டிருந்தவை. கவிஞர், சிறுகதையாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், செம்மையாக்குநர், ஒருங்கிணைப்பாளர் ஆகிய நிலைகளில் அவர் பங்களித்திருந்தார். அதன்மூலம் இளம் தலைமுறையினருக்கு ஆராதனைப் பாத்திரமாகவும் விளங்கினார். நஞ்சுண்டனின் நூல் வடிவம் பெறாத சிறுகதைகளும் தொகுக்கப்படாத கட்டுரைகளும் செம்மையாக்கக் கட்டுரைகளும் ‘காற்றின் நிழல்’ தொகுப்பில் இடம்பெறுகின்றன. எழுத்தில் வாழும் ஓர் இலக்கியவாதிக்கான அஞ்சலி இந்தத் தொகுப்பு.
Be the first to rate this book.