அன்பில் துளிர்த்திருக்கும் பச்சையமாக உருவாகியிருக்கிறது கவிஞர் ப்ரியா பாஸ்கரனின் “காற்றின் மீதொரு நடனம்” என்கிற கவிதைத்தொகுதி. தான் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் தன்னைக் கடந்து சென்றவை மற்றும் தான் கடந்து வந்தவை ஒவ்வொரு படைப்பாளராலும் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். குடும்பம், அன்பு, காதல், புறக்கணிப்பு என அகமும், தான் சார்ந்த புறமும் என தன்னுடைய புழங்குவெளியில் பல கவிதைகள் எழுதியுள்ளார். மேலும் தன்னுடைய பால்யத்தின் தடத்தை அழுத்தமாகப் பதிக்கவும் முனைந்திருக்கிறார். பால்ய நினைவுகளின் கைபிடித்து நடைபயின்றிருக்கும் கவிஞர் ப்ரியா பாஸ்கரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
- சக்திஜோதி
கவிதைகளுக்குள் நிகழும் சொற்களின் நடனம் வாசகமனதுக்குக் கடத்தப்பட்டால் கவிதையோடு வாசகமனமும் கூத்தாடும். அப்படியான பரவசநிலைக்கு நல்ல கவிதைகள் அழைத்துச் செல்லும். கவிஞர் ப்ரியா பாஸ்கரனின் காற்றின் மீதொரு நடனம் கவிதைகளின் சொற்கள் ஒரே ஒத்திசைவில் பல்வேறு இசைக்குறிப்புகளாக காற்றில் ஏவப்பட்டுள்ளன. அவை அந்தரவெளியில் நடனமிடுகின்றன நம்மை வசீகரிக்க.
- இரா. பூபாலன், செயலாளர், பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
காண்கின்ற காட்சிகள் உணர்வுத்தளத்திற்குத் தூண்டுதலாகிற போது மனம் திடுக்கிடவும், ஆச்சரியப்படவும் தயாராகிறது. அத்தகைய அரிய அனுபவங்களைக் கவிதையாக்க நுட்பமான பார்வை வேண்டும். அந்த அடிப்படைக் கவித்துவ அழகியலைக் கண்டுணர்ந்திருக்கிறார் மகுடபதி. பிறரின் பார்வையிலிருந்து நழுவிய காட்சிகள் குறுகிய வரிகளில் பேருலகம் காட்டும் கவிதைகளாக உருமாறி யிருக்கின்றன. கவித்துவம் ,சமூகப்பொறுப்பாகப் பரிணமித்து வாசிப்பவர்களை சிந்திக்கச் செய்து செயல்பாட்டிற்கு நகர்த்தவும் இக்கவிதைகள் துணையாகின்றன.மாறுபட்ட காட்சி அனுபவங்கள் பாடுபொருள்களாக விரிகின்றன. மகுடபதியின் கவிதைகளை மனம் மகிழ்ந்து கொண்டாடலாம்
- க.அம்சப்ரியா, தலைவர், பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
Be the first to rate this book.