பிஞ்சுக்குழந்தைகள், நசிந்துவரும் வேளாண்மை, நச்சுக்கலந்த குடிதண்ணீர், பெண்ணுக்கு அழகு கறுப்பா? சிவப்பா? அறிவா? மேலும் பல பண்பாட்டுக் கலாச்சாரப் பிரச்சினைகள் இந்த நூலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களால் உலகில் மானிட வாழ்வும்,மண்ணும், நீரும், நெருப்பும், வானும், வெளியும் சந்தைச் சரக்காக்கப்படும் வணிகத்தன்மையைக் கண்டு கவிஞர் பழநிபாரதி மனம் கொதித்துப் படைத்திருக்கும் இந்தநூல் சிறந்த புதிய இலக்கியப் படைப்பாகும்.
- ஆர். நல்லகண்ணு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
‘காற்றின் கையெழுத்து’ ஓர் உயர்ந்த நெஞ்சத்தின் போர்க்குரல். ஒரு சமூகத்தின் தலையெழுத்தை மாற்றும் ஆற்றல்மிக்க கையெழுத்து.
- மகேந்திரன்
திரைப்பட இயக்குநர்
பழநிபாரதியின் “காற்றின் கையெழுத்து” அற்புதமான புத்தகம். It played on my nerves!
- கவிஞர் வாலி
எனக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவரான பழநிபாரதி, சினிமாவோடு நிறுத்திக்கொள்ளாமல், தமிழ்வாழ்வை இன்று பாதித்துக்கொண்டிருக்கும் அத்தனை விஷயங்கள் மீதும் தன் பார்வைகளை முன்வைத்திருக்கிறார். தமிழ்ச்சமூகத்தின் மீது அக்கறைகொண்ட அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் இது.
- சாரு நிவேதிதா
எழுத்தாளர்
Be the first to rate this book.