கௌரிபாலனின் கதைகள் தன் இயல்பான தீவிரமும் நேரடித்தன்மையும் கொண்டவை. வாழ்வியக்கத்தின் பகுதிகளாக உயிரோட்டத்துடன் அமைந்திருப்பவை. வாழ்க்கைப் போராட்டமும் சாவும் இங்கே அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றன. சபிக்கப்பட்ட மனிதர்களின் அன்றாட துன்பதுயரங்களைத் தாண்டிய ஒரு துன்பியல் இந்தக் கதைகளின் பின்னணியில் உறைந்து கிடக்கிறது. கூர்நோக்கும் தெளிவான கண்ணோட்டமும் அசலான பாத்திரப் படைப்பும் இயல்பான் உரையாடல்களும் கொண்ட இந்தக் கதைகள் கௌரிபாலனுக்கே உரிய நடையில் கண்முன் விரியும் காட்சிகளாக முன்வைக்கப்படுகின்றன.
Be the first to rate this book.