கவிதைகள் தனிமையின் அந்தகாரத்தில் எழுதப்படுகிறவை. அதே தனிமைத் தருணத்தில் அக்கவிதைகளை வாசிக்கிறபோது ஏற்படுகிற உறை மனநிலை என்றைக்குமாக மனதில் தேங்கிவிடுகிறது. சிறு குழந்தை தன் சின்னஞ்சிறு கைகளால் நட்சத்திரத்தைத் தொட்டுவிட முயலுவது போல, எளிய மொழியின் வழியே கவித்துவத்தின் விநோதத் தருணங்களை நமக்குள் கடத்த முயல்கின்றன சித்துராஜின் கவிதைகள். தன்னுடைய முதல் தொகுப்பான இந்தப் புத்தகத்தில் சித்துராஜ் முதிர்ச்சியானதொரு மொழி நடையை வெளிப்படுத்தியிருக்கிறார். இதே திசையில் அவரது கவிதைப் பயணம் தொடர்கிறபட்சத்தில், உயர்ந்த இலக்குகளை அடையும் என்பதை இந்தக் கவிதைகள் உணர்த்துகின்றன. அதற்கான திறனும், உத்வேகமும், விளிம்பில் பட்டுத் தெறிப்பது போன்ற மனக்கீற்றுகளும் சித்துராஜிடம் பிரகாசமாகக் காணப்படுகின்றன.
- பொன். வாசுதேவன்
Be the first to rate this book.