ஆன்மாவைப் பிளக்கும் திறன்கொண்ட வலிமையான எழுத்து நடை. உறக்கத்தைத் தொலைக்கச் செய்யும் சம்பவங்கள். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் ஊசலாடும் எளிய, ஏழை கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கும் அசாதாரணமான நாவல் இது. ஒரு கல்குவாரியைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் மனித மனத்தின் இருளே இந்நாவலின் மையமாகத் திகழ்கிறது. ஏழ்மையை வளம் துன்புறுத்துகிறது. பலவீனத்தைப் பலம் வேட்டையாடுகிறது. அறத்தைக் குரூரம் கொன்று புசிக்கிறது. இந்தப் பேரழிவில் உண்மை, மனிதம், உறவு, காதல் அனைத்தும் காணாமல் போய்விடுகின்றன. நாவலாசிரியர் மலர்வதி 'தூப்புக்காரி' நாவலுக்காக யுவ புரஸ்கார் விருதுபெற்றவர்.
Be the first to rate this book.