காசி இந்தியாவின் புனித நகரம் மட்டுமல்ல, நம் தமிழை வளர்த்த நகரமுமாகும். மகாகவி பாரதியின் கவிமனம் காசியில்தான் வளர்ந்தது. காசி வடநாட்டின் பகுதியாக இருந்தாலும் பல சம்பிரதாயங்களும் சடங்குகளும் தமிழ்ப் பண்பாட்டின் தொடர்ச்சியாகவே இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஒரு குழு காசி தமிழ்ச் சங்கமத்திற்குச் செல்லும் பயணத்தை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. இந்தப் பயணத்தின் மூலம் காசியின் பெருமை, புனிதம், வரலாறு, பண்பாடு, தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் அதனுடன் உள்ள வரலாற்றுத் தொடர்பு ஆகியவற்றை ஆசிரியர் சுவையாக விளக்குகிறார். இந்தியாவில் பல மதங்களும் கலாசாரங்களும் மொழிகளும் இருந்தாலும், இந்திய மக்களிடையே அடிநாதமாக ஓடி அனைவரையும் ஒன்றாக இணைக்கும் பண்பாட்டுப் பெருமையை நேர்த்தியாக எடுத்துரைக்கிறது இந்தப் புத்தகம். மனதைக் கவரும் தமிழில் எழுதி இருக்கிறார் வித்யா சுப்பிரமணியம்.
Be the first to rate this book.