பொருள்தேடிப் பிரிவதென்பது ஒரு பழம் வேதனை. ஆனால், எப்போதும், எந்தத் தொழில்நுட்ப முன்னேற்றத்தாலும் தீர்க்கமுடியாத பெரும் பிரச்னை. ஒவ்வொரு தலைமுறையினரும் அதை அனுபவிக்கவேண்டியிருக்கிறது.
சங்க இலக்கியங்களில் தலைவர்கள் தத்தம் தலைவியரைப் பிரிந்து பொருள் சேர்க்கச் செல்லும்போது, ‘கார்காலத்தில் திரும்பி வருவேன்’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், பெரும்பாலான தலைவர்கள் கார்காலத்தில் திரும்பி வருவது இல்லை. அதற்குள் அவர்களுடைய வேலை முடிவதில்லை. ஆகவே, திரும்பிவராமல் தாமதப்படுத்துகிறார்கள். அதனால் அவர்களுடைய தலைவியர் வாட, பல அருமையான பாக்கள் நமக்குக் கிடைக்கின்றன.
இவையெல்லாம் பாடலாக இருந்தால் வாசித்து ரசிக்கலாம். அவற்றுக்குள்ளேயே வாழவேண்டியிருந்தால்?
Be the first to rate this book.