“கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே” என்பதை வெறும் முழக்கமாகக் கொள்ளாமல் தனது படைப்பாக்கத்தின் அடிநாதமாகக் கொண்டவர். சமூக விமர்சனத்தை கழித்துவிட்டு அவரால் கதை எழுத முடியாது. இந்த சிறுகதைத் தொகுப்பும் அதற்கான எடுத்துக்காட்டு. மக்களிடம் பெற்றதை மக்களிடமே கொண்டு சேர்! என்று ஒரு சமூகவியல் அறிஞன் கூறுகிறான். கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் பட்ட பாடுகள், மகிழ்ச்சிகள்,நெகிழ்ச்சிகளை உள்வாங்கி உறுத்தி, மகிழ்த்தி கிளர்த்திய சிந்தனைகளை இவரது முப்பதாண்டு படைப்பு அனுபவ வெளிச்சத்தில் மறுபடைப்புகளாக்கி அவற்றை மீண்டும் மக்களிடமே சேர்க்கும் முயற்சியில் விளைந்தவைகளே இந்த சிறுகதைகள். இந்தவகையில் இவற்றை வாசிப்பவர்கள் மக்களின் கதைகளே என்று உணருவர்.
Be the first to rate this book.