இந்தக் கதைகளின் பெண்கள் மந்தையிலிருந்து விலகியவர்களோ மாற்றங்களை உருவாக்குபவர்களோ கிடையாது. வாழ்வு பெண்களின் மீது நிகழ்த்தும் எல்லா வன்முறைகளையும் தாங்கிக்கொண்டு தாழ்பணிந்து போகிறவர்கள். அன்பின் மற்றும் சமூக ஒழுங்குகளின் நிமித்தமாகத் தங்களை வழமைக்கு முழுமையாக ஒப்புக் கொடுத்தவர்கள். பிறகு இழந்தவற்றின் அழுத்தம் தாளாது மெல்ல ஊன்றி மேலெழுந்து நின்று, வஞ்சிக்கப்பட்டதற்கான புகார்கள் இல்லாமல் தனக்கான இன்னொன்றை சுயமாக உருவாக்கிக் கொள்கிறார்கள். மடந்தையிலிருந்து பேரிளம்பெண் வரைக்குமான வெவ்வேறு பருவங்களில் பெண் வாழ்வு மினுங்கலாகவும் துலக்கமாகவும் இந்தக் கதைகளில் சொல்லப்படுகின்றது. வெளிப்படைத் தன்மையும் ரகசியமும் வெளிப்பாட்டு மொழியில் கதையின் தேவைக்கேற்ப வெளிப்படுகிறது. சவிதாவின் மொழி, இயல்பும் சரளமும் கொண்டதாக இருப்பது இந்தக் கதைகளின் வழி பயணிக்க உதவியாக இருக்கிறது. இந்தக் கதைகள் எழுதப்பட வேண்டியவை மட்டுமல்ல, பரவலாக வாசிக்கப்பட வேண்டியவையும் கூட.
* அய்யனார் விஸ்வநாத்
Be the first to rate this book.