ஒரிசாவில்1950களில் உருவாக்கப்பட்ட கானகப் பள்ளியில் நடத்தப்பெற்ற கல்விப் பரிசோதனையின் உணர்ச்சி ததும்பும் உண்மைக்கதை இது.செய்தித்தாளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் வடிவில் படைக்கப்பட்டுள்ளது.வெறுப்பினால் அழுகிய,அதிகாரிகளின் அலட்சியத்தால் அவதியில் சிக்கிய,எந்த மாற்றத்தையும் சந்தேகிக்கும் மனப்பாங்கின் சுமையால் திணறிய உலகம் அது.அங்கே ஓர் இலட்சியத்தை நிறுவியதால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும்,சந்தித்த இடர்களையும் இது பதிவு செய்கிறது.இந்தப் பரிசோதனை நான்காண்டு காலமே தொடர்ந்து.ஆனால் அதன் முக்கியத்துவம் இன்றும் தொடர்கிறது.இது புதியதோர் பாதை கண்ட துணிச்சலையும் கல்வியால் மனிதரின் தலைவிதியை மாற்றியமைக்கும் உணர்ச்சி வேகத்தையும் காவியமாக்கியுள்ளது.
சித்தரஞ்சன் தாஸ் விடுதலை போர் வீரர், கல்விப்பயிற்றுநர், எழுத்தாளர், சுதந்திர இந்தியாவின் முதன்மையான சிந்தனையாளர்களில் ஒருவர், சமூக உளவியலாளரான அவர் மேதைகளான மார்ட்டின் பூபர் மற்றும் தப கிருஷ்ண சவுத்ரி ஆகியோருடன் நட்பில் இருந்தவர்.
Be the first to rate this book.