இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல,உண்மைக்கும் பொய்க்குமிடையே 'அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு எதுவுமில்லை . நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்த | கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்றஉருவாக மாற்றியிருக்கிறது. 'நம்பிக்கையோ அவநம்பிக்கையோ அற்ற , 'மெய்நிகர் உலகின் மெய்நிகர் உருவங்கள், அப்படித்தான் கிருஷ்ண மூர்த்தியின்கதைகளில் வரும் மனிதர்கள் தென்படுகிறார்கள். அவரது படைப்பு மொழி அந்த மெய்நிகர் உலகினுள் கருணையற்ற முறையில் ஊடுறுவ முற்படுகிறது.
- தேவி பாரதி
Be the first to rate this book.