கவிஞர் அகவியிடம் ஓர் அகத்தேடலும் உள்ளது; ஒரு புறத்தேடலும் உள்ளது. அகத்தேடலில் அனுபவம் வெளிப்படுகிறது. புறத்தேடலில் ஆத்திரம் முன்னிற்கிறது. ஒரு தேடல் மிக்கவராக கவிஞர் அகவி அடையாளப்படுகிறார். தேடல் உள்ளவரே தொடர முடியும். கவிஞர் கட்டமைப்பில் அகவியிடம் ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. கவிதை நடையில் திருகல் இல்லாத ஒரு மொழி நடையைக் கையாண்டுள்ளார். நவீனக் கூறுகள் கவிதைகளில் தூக்கயிருந்தாலும் நல்ல புரிதலுக்கு தடையேதுமில்லாமல் வாசகர்களிடம் சென்றடையும் வகையினதாக கவிதைகள் உள்ளன. வாசகர்களுக்கான வாசல் திறந்துள்ளது. ஒவ்வொரு கவிதையினுடைய முடிப்பும் கவிதையின் உச்சத்தைத் தொடுகிறது.
- சேலம் பொன்.குமார் - கவிஞர், விமர்சகர்
Be the first to rate this book.