திருவரங்கம், தமிழரின் ஆன்மிக, பண்பாட்டு அடையாளம். காவிரியும் மக்களும் இன்தமிழும் அரங்கனும் இணையும் இடம் திருவரங்கம். அது காவிரி - கொள்ளிடம் உள்ளிடைத் தீவு. தனக்கெனத் தனி வரலாற்றை, பண்பாட்டை, சமூக அமைப்பை வளர்த்துக் கொண்ட தமிழ் நாகரிகத் தொட்டில் அது. தமிழும் வைதீகமும் பிணைந்தும் பிணங்கியும் வளர்ந்த நகரம். திருவரங்கனின் கோவில்தான், திருவரங்கத்தின் இதயமும் மூளையும். அந்தக் கோவிலையும், அதன் பெருமாளையும், தாயாரையும், அதன் மதில்களுக்கு உள்ளும் வெளியும் வாழ்ந்த மக்களின் வாழ்வையும் ஆழமாகத் தொட்டுப் பேசுகிறது இந்தூல். இந்த நூல் திருவரங்கம் கடந்து வந்த பாதையின் தடத்தைத் தேடும் சிறு முயற்சி; அதன் வெளிச்சத்தைக் காட்டும் சிறு சுடர். இது திருவரங்க ஆன்மாவின் குரல்.
Be the first to rate this book.