காலத்தின் விரைவுக்கேற்ப ஓடவேண்டியவர்கள் நாம். கட்டுரைகள் சிறு கட்டுரைகளாகிவிட்டன. சிறு கட்டுரைகள் தொகுபத்திகள் ஆகிவிட்டன. சுருங்கவும் விளங்கவும் சொல் என்கின்றது படிப்போர் திரள். அம்முறைமையை ஏற்றுகொண்டு தாம் கண்டவை கேட்டவை கருதியவை குறித்துத் திறன்படவும் சீர்திகழ்ச்சியோடும் எழுதிச் செல்கிறார் மகுடேசுவரன். ஒருநாளில் ஒருபொழுதில் வெவ்வேறு காட்சிகளை நிகழ்த்தும் உலகம் அவர்முன் உள்ளது. காலதரின் திறப்புக் கட்டங்கள் வழியே அவற்றைக் கண்டு மொழிவதற்குரிய வேட்கை மகுடேசுவரனின் எழுத்தில் தொடர்ந்து இலங்குகிறது. படிப்பதன் களிப்பை, மொழி வளத்தாலான எழுத்தின் மயக்கை இந்நூல் தரும்.
Be the first to rate this book.