காலநதி சமூகத்தின் இரட்டை மனநிலையை எடுத்துக்காட்ட எடுத்த சிறு முயற்சி. முற்போக்கு என்பது ஒருவரின் ஆழ் மனதிலும், செயலிலும் கூட இருக்கவேண்டும். இலக்கியம் பேசிக்கொண்டு தன் வீட்டுப் பெண்களைக் குறித்து பெருமையாய் வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டு, அப்படியே உள்பெட்டியிலும், குறுஞ்செய்திகளிலும் மற்ற பெண்களிடம் வக்கிரத்தைக் காட்டும் ஆண்கள், வெளியே சாதி மறுப்பு பேசிக்கொண்டு தன் வீட்டு மருமக(னோ)ளோ தன் சாதியில் மட்டுமே வேண்டும் என தேடும் நவயுகப் புரட்சியாளர்கள், பெண் விடுதலையை இன்னமும்கூட ஏட்டளவில் மட்டுமே கொண்டாடக் காத்திருக்கும் இந்த சமூக வலைதளத் தலைமுறை என இவையே காலநதி.
Be the first to rate this book.