புலம்பெயர் வாழ்வின் அந்நியத் தன்மை, வெறுமை ஆகியவை ஈழத் தமிழர்களுக்கும் மேலான வாழ் நிலையை நாடிச் சென்ற தமிழகத் தமிழர்களுக்கும் பொதுவானவை. இப்பொதுத்தன்மைகளையும் மாறுபடும் புள்ளிகளையும் கலிஃபோர்னியாவில் வாழும் கோகுலக்கண்ணனின் எழுத்தில் தெளிவாக இனங்காண முடிகிறது.
அன்னிய மண்ணில் முளைக்கும் அடையாளச் சிக்கல்கள், பாதுகாப்பின்மை, கலாச்சாரத் தன்மை, பிறந்த மண் சார்ந்த நினைவேக்கம், வளர் இளம் பருவத்தின் பாலியல் குழப்பங்கள் ஆகிய கூறுகளால் உருப்பெற்ற படைப்புகள் இத்தொகுப்பில் உள்ளன. கவித்துவமான மொழியும் சரளமான கதைகூறல் முறையும் அனுபவச் செழுமையும் உள்ளார்ந்த கலைத் திறனும் இக்கதைகளை முக்கியமான படைப்புகளாக ஆக்குகின்றன.
Be the first to rate this book.