இருபத்தி நான்காம் நாள் மாலை
உண்மையான மவுனம் என்பது மவுனமாக இருக்கும் வெறும் நாவு அல்ல.
அது ஒரு மவுனமான மனம்.
ஒருவன் தன் நாவை மட்டும் அடக்கிக் கொண்டு, அதேவேளை, குழப்பமான அலைபாயும் மனதைக் கொண்டிருப்பது பலவீனத்திற்கான தீர்வு அல்ல, எந்த ஆற்றலுக்குமான ஆதாரம் அல்ல.
மவுனம், ஆற்றல் மிக்கதாக இருக்க வேண்டும் என்றால்,
முழு மனதையும் தழுவி இருக்க வேண்டும். இதயத்தின் ஒவ்வொரு அறையையும் ஊடுருவி இருக்க வேண்டும்.
அது நிம்மதியான மவுனமாக இருக்க வேண்டும். இந்தப் பரந்த, ஆழமான, உடன் உறையும் மவுனத்தை ஒருவன் தன்னை எந்த அளவிற்கு வெல்கிறானோ அந்த அளவிற்கே அடைய முடியும்.
Be the first to rate this book.