ஆனந்த் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை. நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பது போல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிகம் உணர்ச்சிவசப்படாத சொற்களில் எழுதப்பட்டவையாகத் தெரியும் வரிகளில் மனதின் பல நிறங்களையும் பார்க்க முடியும். அறிவு சார்ந்த தொனியில் கட்டப்பட்டவைபோலக் காட்சியளிக்கும் கவிதைகளில் புலன்களின் தீவிரத்தை உணரமுடியும். அகம் புறம் என்ற பேதமில்லாத ஒரு புள்ளியிலிருந்து மனதின் களியாட்டமாக நிகழ்பவை ஆனந்தின் கவிதைகள். அவருடைய பிரத்தியேகப் பார்வையே இந்தக் களியாட்டத்தின் விதிகளை உருவாக்குகிறது.
Be the first to rate this book.