ஒரு நாடகப் பிரதி நிகழ்த்தப்படும்போது மாறுதலடைய வேண்டும் என்பார் பிரெக்ட். இந்த நாடகப் பிரதியும் அத்தகைய தன்மை கொண்டதே. அத்துடன் காலந்தோறும் பெண் என்பவள் ஆணாதிக்கத்தை எவ்விதம் எதிர்கொண்டாள் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு சித்திரிக்கிறது. இப்பிரதியில் வழக்கமான மேடை நிகழ்வுகளில் உள்ள கதைச்சரடு இல்லை; கதைமாந்தர்கள் இல்லை; கற்பனைக்கு வேலை இல்லை.
அத்துடன் பெண்களது மேற்கோள்களை அவர்களது ‘குரலாக’ காட்டுவதைவிட ‘நமது வாசிப்பாக’ நிகழ்த்தும் அனுபவத்தைத் தருகிறது. உயர் கல்வி வகுப்பறைகளிலும் புத்தகங்களிலும் மட்டுமே பேசப்பட்ட பெண்ணிய விவாதங்களை பொதுவெளியில் வைத்து, செறிவாக ஆராயமுடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இந்தப் பிரதி அரங்கேற்றம் செய்யப்பட்ட போது பார்வையாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை தகர்த்ததே இதற்குச் சான்று.
Be the first to rate this book.