"தன் லட்சியத்தை அடைய ஆர்.எஸ்.எஸ். எந்த வழியையும் கையிலெடுக்கும் என்பதற்கு அதன் வரலாறே சாட்சி. அந்த வரலாற்றினை மக்களுக்கும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த முயற்சியின் ஒரு முக்கியப் பகுதியாகத்தான் புதுமடம் ஹலிம் எழுதியிருக்கும் இந்த நூலை நான் பார்க்கிறேன். 2002ஆம் ஆண்டில் நடந்த குஜராத் படுகொலை என்பது இன்றைய தலைமுறையில் பலருக்குத் தெரியாது. தெரிந்தவர்களின் நினைவும் மங்கிப் போயிருக்கும்.
1992இல் நடந்த பாபர் மசூதி இடிப்பும் அப்படித்தான். நல்ல நினைவுகளோடு வரும் தலைமுறைகளாவது வாழ்வதற்கு ஒரு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. இதில் கருத்தியல் ரீதியான போருக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. அந்த வகையில் புதுமடம் ஹலிம் அவர்களின் இந்த நூல் ஒரு நல்வரவு! "
- ஆர். விஜயசங்கர், அரசியல் விமர்சகர், ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர்.
Be the first to rate this book.