எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது. ‘உன்னதம்.’இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள். அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு. எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட தரத்தால் மட்டும் அல்ல.விலையும் அப்படித்தான்.ஏழை குடும்பத்தில் பிறந்த நளினியின் கதை.
Be the first to rate this book.