புதிதாக ஒரு கிராமத்திற்கு வந்து சேரும் சிறுவன் சந்திரனுக்கு ஒரு காய்ந்த மரம் நண்பனாகிறது. குழந்தைகளுக்கும் மரத்திற்கும் உள்ள உறவை நாம் இதுவரை அறியாத முறையில் இதில் கதையாக்கி இருக்கிறார் கதைசொல்லி. அந்த மரம் தன்னுடைய நீண்ட கதையை இலைகளுக்குள் ரகசியமாக வைத்து சந்திரனுடன் பேசுகிறது. பேசிப்பேசி சந்திரனும் அந்த மரமும் இறுதியில் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் வாசித்துப் பார்க்க வேண்டும். சிறுவன் ஸ்ரீஹரியின் கதையும் நண்பர் அழகுராஜின் ஓவியமும் இணைந்து ஒரு செழிப்பான கதையை குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கிறது.
குட்டி ஆகாயம் வெளியிடும் சிறார் சொன்ன கதை வரிசையில் இது ஐந்தாவது புத்தகம்.
Be the first to rate this book.