பொய்யூர்' முருங்கைக்காய்... 'வேலூர்' முள்ளு கத்தரிக்காய்... 'பூங்காவூர்' புடலங்காய்... 'அன்னஞ்சி' தக்காளி... என்று குறிப்பிட்ட சில காய்கறிகளின் பெயர்களோடு ஊர்ப் பெயர்களையும் இணைத்துப் பேசப்படுவது உண்டு. அந்த அளவுக்குக் காய்கறிகளை ருசித்து, ரசிப்பவர்கள் நாம். இன்று 'ஹெல்த் கேர்' முக்கியத்துவத்தை அனைவருமே உணரத் துவங்கிவிட்டதால், நாள்தோறும் சத்தான காய்கறிகளை வாங்கி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி மீது கூடுதல் கவனம் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காய்கறிச் செடியையும் விவசாயி வளர்த்தெடுப்பதற்குள் அவர்களை வாட்டி எடுக்கும் இடைஞ்சல்கள்தான் எத்தனை! திடீர் மழை, மின் தடை, உரத்தட்டுப்பாடு, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி, கூலி ஆள் பற்றாக்குறை... இப்படி எத்தனையோ! இவ்வளவு பிரச்னைகளையும் சமாளித்து வெற்றிகரமாக காய்கறி சாகுபடியில் சாதிப்பது எப்படி என்பது பல விவசாயிகளுக்கும் கைவந்த கலையாகவே இருக்கிறது. அத்தகைய விவசாயிகளின் வெற்றி ரகசியங்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
Be the first to rate this book.