காலந்தோறும் கவிதைகளின் போக்குகள் மாறுகின்றன. எனினும், அவை ஒருபோதும் வாசகர்களின் மதிப்பீடுகளுக்கு எதிராகப் பயனளிப்பதில்லை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக கவிதைகளை அவதானித்து வரும் யுகபாரதி இதுவரை ஒன்பது கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
அத்தொகுப்புகளில் இடம்பெற்று வாசகர்களின் கவனத்தை ஈர்த்த கவிதைகள் 'காகித றெக்கை' எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. நவீன கவிதைகளின் அடையாளம் தரித்த யுகபாரதியின் கவிதைகள் வெகுஜன வரவேற்ப்புக்கும் உள்ளானவை. திரைப்பாடலாசிரியராக இயங்கிய போதிலும் கவிதைகளின் தற்கால தன்மைகளை உள்வாங்கிய யுகபாரதி, குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தமிழுக்கு தந்திருக்கிறார். மொழியின் உச்சபட்ச சாத்தியங்களை யுகபாரதியின் கவிதைகள் உணர்த்துகின்றன.
Be the first to rate this book.