திருக்குறளில் கூட (காமத்துப்பால்) ஆண்- பெண் (ஹெட்ரோசெக்சுவல்) காதல் மட்டும்தான் இடம்பெற்றிருக்கிறது. ஒரு ஆணிற்கு இன்னொரு ஆண் மீதெழுந்த காதலையோ, ஒரு பெண்ணிற்கு, இன்னொரு பெண் மீதெழுந்த காதலையோ வள்ளுவர் சட்டை செய்யவில்லையே என யோசித்திருக்கிறேன். எழுத்தாளர் முகில் ஹோமோசெக்சுவல் இணையின் காதல் கதையையும், கூடவே காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, அது உயிர்களுக்கானது என பென்குயினின் காதல் கதையையும் இப்புத்தகத்தில் இணைத்தது பாராட்டிற்குரியது. உறவுமுறைகளெல்லாம் மனிதன் வகுத்தவை, இயற்கைக்கு அது குறித்து எவ்வித அறிவும் கிடையாது என்பதை முழு நிச்சயமாக நம்புபவன் நான்.
இந்நூலைப் படிக்கையில், ‘எங்கேயும் காதல்’ பாடலில் வலம் வரும் பிரபுதேவா போல நாமும் முகிலின் எழுத்துகளை ரசித்தபடி வலம் வரலாம். அத்தனைக் கதைகளும் சுபம் என்றே முடிகின்றன.
Be the first to rate this book.