கொஞ்ச நாட்களில் காதல் கடுப்பாகி விடுகிறதே.. ஏன்?
காதல் ஒரு momentary feeling. அது தோன்றும் கணங்களை வரையறுக்க முடியாது. ஆனால் அந்த momentary feeling-ஐ நிலைத்த உணர்வாக மாற்ற விரும்பியே காதலிக்கத் தொடங்குகிறோம்.
கண நேர காதலுணர்வை நிலையாக்க வேறு பல உணர்வுகளை துணையாகக் கொள்கிறோம். சில நேரம் கெஞ்சி, சில நேரம் மிஞ்சி, சில நேரம் மிரட்டி, சில நேரம் பணிந்து, சில நேரம் பணிய வைத்து, சில நேரம் காயப்படுத்தி என பல வகை
நிலைகளை கையாள்கிறோம். ஆனால் காலப்போக்கில் எந்த காரணத்துக்காக காதலிக்கத் தொடங்கினோம் என்பதை மறந்துவிடுகிறோம்.
காதலின் சுவாரஸ்யமான விஷயமே என்னவென்றால், யாருமே பார்க்காத உண்மை உங்களை, ஒருவருக்கு காண
கொடுப்பதுதான். பிறகு அவரே அந்த உண்மைகளை எடுத்து ஒருநாள் உங்களுக்கு எதிராக களமாடுவார். நன்றாக தீட்டப்பட்ட கத்தியை எடுத்து, எங்கு குத்தினால் உங்கள் உயிர் போகும் என சொல்லிவிட்டு, 'குத்தி விடாதே' என அவரிடம் கொடுப்பீர்கள். அவர் குத்தமாட்டார் என்றும் நம்புவீர்கள்.
இந்த நவதாராளமய காலத்தில் சொல்ல முடியாத அளவுக்கு தனி நபருக்கு அகச்சிக்கல்கள் ஏற்படுகின்றன. வேலை,
எதிர்காலம், பணம் என பல கவலைகள் சூழ்கின்றன. அவநம்பிக்கை, தனிமை, கழிவிரக்கம் என பல உணர்வுகளில்
தத்தளிக்கிறோம். இதனால் priorities மாறுகின்றன.
இன்று வரை நாம் நம்பும் priority hierarchy-ல் காதல் கிடையாது. காதல்தான் முதன்மை என காதலிக்கத் தொடங்குகிறோம். ஆனால் காலப்போக்கில் காதலை இரண்டாம், மூன்றாம் பட்சமாக ஆக்கும் அளவுக்கு பிற
பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
எந்த அளவுக்கு குழப்பத்தில் இருக்கிறோமென்றால் வருந்தும்
நேரங்களில் துணை வேண்டுமென காதலிக்கிறோம். பின் வருத்தம் நேரும் நேரங்களில் துணையைத் தள்ளி நிறுத்துகிறோம். Neo Liberalism வெற்றி அடைவது இங்குதான். என்னுடைய பிரச்சினைகளில் இருந்து காதல் துணையை தள்ளி வைக்
தூண்டுகிறது. அதுவே சரியெனவும் நம்ப வைக்கிறது.
- ராஜசங்கீதன் ❤️
Be the first to rate this book.